கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. 06.10.2026 காலை 7.30 மணி முதல் 07.10.2026 காலை 7.30 மணி வரை பதிவான மழை அளவின்படி, பில்லூர் அணை பகுதியில் அதிகபட்சமாக 116 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூர் வடக்கு – பீளமேடு விமான நிலையத்தில் மழை பதிவாகாத நிலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் 43 மி.மீ., மேட்டுப்பாளையத்தில் 45 மி.மீ. மற்றும் அன்னூரில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 83 மி.மீ. மழை பெய்துள்ளது. குறிப்பாக, பில்லூர் அணை பகுதியில் 116 மி.மீ. கனமழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து தற்போது 5,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள சுக்கு காபி கடை பகுதி மற்றும் துணை நீர்மின் நிலையம் வழியாக செல்கிறது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள துணை நீர்மின் நிலையம் வழியாக 2,500 கனஅடி தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.