17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பத்தனேந்தல் கண்மாயில் குவியும் கழிவுகள்: சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.! தூர்வாரி சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை.!!

பத்தனேந்தல் கண்மாயில் குவியும் கழிவுகள்: சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.! தூர்வாரி சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை.!!

எழுதியவர்: Baker BAker October 6, 2026, 6:17 pm

ராமநாதபுரம்: வெண்ணத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கொல்லை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அருகில் உள்ள பத்தனேந்தல் கண்மாய், அப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்மாயில் குளிப்பதுடன், வீட்டு உபயோகத்திற்கான பல்வேறு தேவைகளுக்கும் கண்மாய் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக கண்மாய் முறையாக பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் குளிக்கும் பகுதியில் பழைய துணிகள், ஷாம்பு பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. நீண்ட காலமாக கழிவுகள் அகற்றப்படாததால் அவை மண்ணில் புதைந்தும், நீரில் கலந்து காணப்படுகின்றன.

இதனால் கண்மாய் நீரில் குளிக்கும் பொதுமக்களுக்கு உடலில் அரிப்பு, தோல் ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கண்மாயின் கரையோரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் மண் அரிப்பால் வேர்கள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. சில மரங்கள் வேர்ப்பிடிப்பை இழந்து சாய்ந்துள்ளதால், அவை எந்நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, மேட்டுக்கொல்லை கிராம மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பத்தனேந்தல் கண்மாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். கண்மாயில் தேங்கியுள்ள கழிவுகளை முழுமையாக அகற்றுவதுடன், தேவையான இடங்களில் கண்மாயைத் தூர்வாரி சீரமைக்கவும், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உரிய முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!