17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொண்டியில் கேட்டை உடைத்து சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு!

தொண்டியில் கேட்டை உடைத்து சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு!

எழுதியவர்: Baker BAker October 6, 2026, 6:15 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி பாவோடி மைதானம் அருகே, வீட்டின் கேட்டை உடைத்து சேதப்படுத்தியதாக 7 பேர் மீது தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி பாவோடி மைதானம் அருகே நவாஸ்கான் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்பகுதியில் கேட் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிலம் தொடர்பாக நவாஸ்கானுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் வீட்டின் முன்பகுதிக்கு வந்து கேட்டை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தொண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேட்டை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படும் 7 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் நிலத்தகராறு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!