17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைமுறை கடந்த மயானம் ஆக்கிரமிப்பு சர்ச்சை: ஆட்சியரிடம் இலங்காமணி கிராம மக்கள் மனு!

தலைமுறை கடந்த மயானம் ஆக்கிரமிப்பு சர்ச்சை: ஆட்சியரிடம் இலங்காமணி கிராம மக்கள் மனு!

எழுதியவர்: Baker BAker October 6, 2026, 6:09 pm

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட இலங்காமணி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வரும் சுடுகாட்டுப் பகுதி மீது, கடந்த ஒரு மாதமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

​மயானப் பகுதியைச் சில தனிநபர்கள் ஆக்கிரமித்து வியாபார நோக்கில் மாற்ற முயல்வதாகவும், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அப்பகுதியை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் கிராம மக்கள் தரப்பில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

​இதுகுறித்து ஏற்கெனவே கீழக்கரை வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட போதிலும், எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பில் இருந்து மயானத்தைப் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

​பல தலைமுறைகளாக மக்கள் பயன்படுத்தி வரும் இந்த மயான நிலத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும், அரசு ஆவணங்களில் இதனை முறையாகப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!