17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் — போக்குவரத்து கடும் பாதிப்பு.!

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் — போக்குவரத்து கடும் பாதிப்பு.!

எழுதியவர்: Baker BAker October 4, 2026, 4:27 pm

ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்புவதற்கான பரிந்துரை கடிதத்தை காவல்துறையினர் வழங்குவதில் தாமதம் செய்வதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் நீண்ட நேரத்துக்கு பிறகு, மறியலை கைகைவிட்டார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!