17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை இறகுப்பந்து போட்டி.!

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை இறகுப்பந்து போட்டி.!

எழுதியவர்: Baker BAker October 2, 2026, 12:49 pm

ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள் விளையாட்டு அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பரமக்குடியைச் சேர்ந்த ஹரிகரன் முதலிடத்தையும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனீஸ் குமார் இரண்டாம் இடத்தையும், கமுதியைச் சேர்ந்த சையது அப்துல் ரகுமான் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹரிகரன்–முனீஸ் குமார் ஜோடி முதலிடத்தையும், அருண்குமார்–முனீஸ் குமார் ஜோடி இரண்டாம் இடத்தையும், டேவிட் வின்சன் ராஜா–முத்துசாமி ஜோடி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ராஜேஸ்வரி முதலிடத்தையும், மகாலட்சுமி இரண்டாம் இடத்தையும், பாதம் பிரியாள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ராஜேஸ்வரி–ஆனந்தி ஜோடி முதலிடத்தையும், பாதம் பிரியாள்–சாந்தி ஜோடி இரண்டாம் இடத்தையும், காளீஸ்வரி–முருகவள்ளி ஜோடி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற பயிற்சியாளர் ரஞ்சித் குமார், தொழிலதிபர் காளிதாஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரன் ஆகியோர் பதக்கங்களையும் சான்றிதழ் களையும் வழங்கினர்.

 

இப்போட்டியை ராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழக நிர்வாகிகள் ராஜசேகர், ரமேஷ்பாபு, அன்வர் ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் குபேந்திரன், அன்வர் ராஜா, ராஜா ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!