17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஓட்டுநர், நடத்துனர் இன்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக இயங்கிய அரசு பேருந்து!

ஓட்டுநர், நடத்துனர் இன்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக இயங்கிய அரசு பேருந்து!

எழுதியவர்: Baker BAker October 1, 2026, 8:16 pm

ராமநாதபுரம் பாரதி நகர் செல்லும் சாலையில் உள்ள சுங்க இலக்கா அலுவலகம் முன்பு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்து ஒன்று இயந்திரம் இயங்கிய நிலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது 

 

பயணிகள் சேவையில் இல்லாத நிலையில், பேருந்தின் இயந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், அரசு எரிபொருளை தேவையின்றி வீணடிக்கும் செயல் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

குறிப்பாக, அந்த பகுதியில் முறையான பேருந்து நிறுத்தம் இல்லாத நிலையில், பொதுமக்கள் நடமாட்டமும் இல்லாமல் பேருந்து தனியாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாதபோது இயந்திரத்தை இயக்கியபடி வாகனத்தை விட்டுச் சென்றுள்ளதாகவும் முகம் தெரியாத நபர்கள் யாரேனும் பேருந்தில் ஏறி அதை இயக்க முயன்றாலோ அல்லது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என கேள்விகள் எழுந்துள்ளது.

 

அரசுப் பேருந்தை நிறுத்திவிட்டு செல்லும் போது இயந்திரத்தை முறையாக நிறுத்தி, வாகனத்தை பாதுகாப்பாக விட்டுச் செல்வது பணியாளர்களின் அடிப்படை பொறுப்பாகும். இந்த நடைமுறை பின்பற்றப்படாததால் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .

 

 

 

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் தொடர்பான உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு வாகனங்களை கையாள்வதில் பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!