இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் குழந்தைகள் நிறைமதி (வயது 9) மற்றும் பாலபிரணவ் (வயது 6) ஆகியோர், (30.09.2026) அன்று அவர்களது வீட்டிற்கு எதிரே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள தகரக் கொட்டகை அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அறுந்து கிடந்த மின்வயர் தகரக் கொட்டகையில் பட்டிருந்த நிலையில், அதனை எதிர்பாராதவிதமாக குழந்தைகள் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் , உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.




You must be logged in to post a comment.