17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு.!

கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு.!

எழுதியவர்: Baker BAker October 1, 2026, 8:02 pm

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சாயல்குடி, சிக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முத்துச்சாமி மற்றும் வெண்ணிலா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சுமார் 32 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது தடை செய்யப்பட்ட சுமார் 15 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் உணவுப் பார்சல்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விதிமுறைகளை மீறிய 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவுப் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் வகையில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளன.

ஆய்வின்போது செயற்கை வண்ணங்கள் கலந்த சிக்கன் 65 உள்ளிட்ட சுமார் 4.5 கிலோ எடையுள்ள பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!