17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பேருந்து தாமதம்; பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு..

அரசு பேருந்து தாமதம்; பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு..

எழுதியவர்: Abubakker Sithik October 1, 2026, 11:38 am

அரசு பேருந்து உரிய நேரத்தில் சென்றடையாததால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரமநாயகம், 2026 மார்ச் 2ல் அரசு பேருந்தில் பழனி சென்றார். பேருந்து உரிய நேரத்தில் பழனி சென்றடையாததால், பயணக் கட்டணம் ரூ.120ஐ வட்டியுடன் திருப்பித்தரவும், இழப்பீடு வழங்கவும் கோரி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைவர் ஒய். கிளாட்ஸ்டன் பிளஸ்டு தாகூர், உறுப்பினர் எம். கனகசபாபதி ஆகியோர் செப்.24ல் தீர்ப்பு வழங்கினர். சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக அரசு போக்குவரத்து பழனி டிப்போ கிளை மேலாளர் கோயம்புத்தூர் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஆகியோர் ரூ.10 ஆயிரமும், வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.

இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. டிரைவர், கண்டக்டர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!