17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 14-வது மாநாடு.!

மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 14-வது மாநாடு.!

எழுதியவர்: Baker BAker October 1, 2026, 7:20 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் மஹாலில் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 14-வது மகாசபை மாநாடு தோழர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் மூத்த தோழர் ஆனந்தாயி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுச்செயலாளர் எஸ். பாஷா வேலை அறிக்கையையும், பொருளாளர் சத்தியா வரவு-செலவு கணக்கையும் தாக்கல் செய்தனர்.

மாநாட்டில் தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் மற்றும் மேட்டுப்பாளையம் நகர வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 25 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜாகீர் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்கப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திரளான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட நிலையில் மாநாடு நிறைவடைந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!