தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை 28.09.2026 அன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கலையரங்கத்தில் இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உடனிருந்தார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நல பணிகள் மருத்துவர் பிரேமலதா, சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மருத்துவர் நிர்மல் சன், தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மாவட்ட மருத்துவ அலுவலர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர்கள் முகமது இப்ராஹிம், தமிழ்செல்வி, சங்கரி, தென்காசி உறவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் தண்டபாணி, மோகினா மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.