25 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பத்திரப் பதிவு அலுவலகத்தில் ‘லஞ்சம்’ வசூல் செய்வதாக ஆடியோ சமூக வளைய தளங்களில் வைரல்.!

பத்திரப் பதிவு அலுவலகத்தில் ‘லஞ்சம்’ வசூல் செய்வதாக ஆடியோ சமூக வளைய தளங்களில் வைரல்.!

எழுதியவர்: Baker BAker September 24, 2026, 10:14 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதற்காக கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சார்பதிவாளர் மாலினி தேவகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்ய வந்த நபரிடம், ஆவண எழுத்தர் மூலம் ரூ.28,000 GPay வாயிலாக பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த பத்திரப் பதிவு கட்டணத்தைவிட கூடுதலாக தொகை வசூலிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தரிடம் அந்த நபர் தொலைபேசியில் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது.

அப்போது தொலைபேசி உரையாடலில், “பத்திரக் கட்டணம் போக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொடுக்க ரூ.5,000 தேவைப்பட்டது. அந்தப் பணம் கொடுக்கப்பட்டுவிட்டது; எனவே திருப்பித் தர முடியாது” என பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, திருவாடானை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, திருவாடானை சார்பதிவாளர் மாலினி தேவகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, “வைரலான ஆடியோ தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் தவறு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்களிடம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!