25 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழாய்கள் இருக்கிறது… குடிநீர் இல்லை!

குழாய்கள் இருக்கிறது… குடிநீர் இல்லை!

எழுதியவர்: Baker BAker September 24, 2026, 10:11 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி, இளமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சளோடை எனப்படும் மரப்பாலம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினை நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குடிநீர் தேவைக்காக பெண்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தினமும் குடிநீருக்காக அலைந்து திரிவதால் பெண்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான குடிநீர் இணைப்பு மற்றும் விநியோகம் நடைபெறாததால், தற்போது பல இடங்களில் குழாய்கள் உடைந்து சிதிலமடைந்து கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“குடிநீர் வழங்குவதற்காக குழாய்கள் அமைத்தும், தண்ணீர் வரவில்லை என்றால் திட்டத்தின் பயன் என்ன?” என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து மக்களை பாதித்து வரும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பது புரியாத புதிராகவே உள்ளதாக கூறுகின்றனர்

மரப்பாலம் கிராம மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த குழாய்களை சீரமைத்து, வீடுகளுக்கு முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!