வீடு தேடி கொசுப்புழு ஒழிப்பு • தீவிர புகை மருந்து தெளிப்பு • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக 20 டி.பி.சி. பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும், 2 குழுக்கள் மூலம் புகை மருந்து (Fogging) தெளிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு செய்து, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அழிக்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு IEC நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
“வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திடுவோம்; கொசுப்புழு உற்பத்தியை தடுப்போம்; டெங்குவை விரட்டுவோம்” என நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.