இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி சார்பில், பொதுமக்களிடையே குப்பைகளை நான்கு வகைகளாக முறையாகத் தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூதன முறையில் ‘செல்ஃபி பாயிண்ட்’ அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கீழக்கரை நகராட்சியில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி கழிவு மற்றும் அபாயகரமான கழிவு என நான்கு வகைகளாகத் தரம் பிரித்து, நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட ‘செல்ஃபி பாயிண்ட்’ மூலம், குப்பைகளைத் தரம் பிரிப்பதன் அவசியம் மற்றும் முறையான கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி பாயிண்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, தூய்மை குறித்த விழிப்புணர்வு செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.
“கழிவுகளைப் பிரிப்போம் – நம் நகரைச் சுத்தமாக வைத்திடுவோம்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, பொதுமக்களிடையே குப்பை தரம் பிரிப்பு மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.




You must be logged in to post a comment.