24 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சியில் 4 வகை குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்.!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 4 வகை குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்.!

எழுதியவர்: Baker BAker September 24, 2026, 6:16 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, 4 வகையான குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்து வீடு வீடாகச் சென்று தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் சுயஉதவிக் குழுக்களைச் (SHGs) சேர்ந்தவர்கள் முன்னிலை வகித்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சி அனிமேட்டர்கள் குழுவினர் பொதுமக்களிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகள் மற்றும் சுகாதாரக் கழிவுகள் என 4 வகையாகக் குப்பைகளைத் தரம் பிரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் முறையாக வழங்குவது குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளக்கினர்.

மேலும், குப்பைகளை முறையாகத் தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகரைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!