பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 52 கிலோ எடை கொண்ட 40,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்கு பெங்களூரில் இருந்து பழைய துணியுடன் கூடிய பார்சலில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில், மேற்படி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் பெங்களூரில் இருந்து அனுப்பிய சின்னகாளாம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 30), பார்சல் வாங்க வந்த சின்னகாளாம்பட்டியை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவரின் மகன் தனசேகர் (வயது 32) மற்றும் சங்குப்பட்டியை சேர்ந்த அய்யா கிருஷ்ணன் என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 48) ஆகிய 03 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தனசேகர் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 52 கிலோ எடை கொண்ட 40,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 5,000/- ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.