தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 50,800 மதிப்பிலான 75 கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல் துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 19.09.2026 அன்று சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் கோவில்பட்டி – சொக்கநாதன்புத்தூர் ரோட்டில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல் துறைமினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, இனாம் கோவில்பட்டியை சேர்ந்த இருதயசாமி மகன் செல்லசாமி (63), செல்லசாமி மகன் முனியராஜ் (29) ஆகியோரிடமிருந்து புகையிலை கைப்பற்றப்பட்டு, கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, சோலையப்பன் என்பவரது வயலில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 75 கிலோ எடை கொண்ட சுமார் 50,800 மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சிவகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.