22 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சியில் ‘செழிப்பு’ இயற்கை உரம் விற்பனை தொடக்கம்.!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ‘செழிப்பு’ இயற்கை உரம் விற்பனை தொடக்கம்.!

எழுதியவர்: Baker BAker September 22, 2026, 10:25 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நகராட்சி அலுவலக வளாகத்தில் ‘செழிப்பு’ (Organic) என்ற பெயரில் இயற்கை உரம் விற்பனை செய்யும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இந்த இயற்கை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மண்ணின் வளத்தை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘செழிப்பு’ இயற்கை உரம், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஒரு கிலோ ரூ.5 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த உரப் பைகள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைப்போர் மட்டுமின்றி விவசாயிகளும் இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா, சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர், மேற்பார்வையாளர் பிரிதிவிராஜ், நகராட்சி அனிமேட்டர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உரப் பைகளை வழங்கினர்.

நகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளை பயனுள்ள இயற்கை உரமாக மாற்றும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘செழிப்பு’ இயற்கை உரத்தைப் பயன்படுத்துமாறும் நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!