22 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்கம்.!

கீழக்கரையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்கம்.!

எழுதியவர்: Baker BAker September 22, 2026, 10:13 pm

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளியான கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா மற்றும் பள்ளியின் தாளாளர் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மாணவர்களின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், பள்ளி வருகையை அதிகரித்து, கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நல மேம்பாட்டிற்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!