22 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் விரிவாக்க திட்டம் தொடக்கம்.!

மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் விரிவாக்க திட்டம் தொடக்கம்.!

எழுதியவர்: Baker BAker September 22, 2026, 9:49 pm

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.  இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 6 நகராட்சிப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி காலை உணவுத் திட்டம் (PKBFS) தொடங்கி வைக்கப்பட்டது.

 

இதன் தொடக்க விழா மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் மஹரிபா பர்வீன் தலைமை தாங்கி, காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் காலை உணவு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் 6 நகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 1,743 மாணவ, மாணவிகள் நாள்தோறும் பயனடைய உள்ளனர்.

 

மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்கவும் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!