இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில் இராமநாதபுரம் மத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கீழக்கரையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ச. முஹம்மது நஃபீல், தமுமுக இராமநாதபுரம் மத்திய மாவட்ட துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளரும், தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளருமான முகவை எஸ். சலிமுல்லாஹ் கான் கலந்து கொண்டார். தேர்தல் பொறுப்பாளர் கோவை சாகுல் ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு பேச்சாளர்களாக மௌலவி ஹுசைன் மன்பஈ, பழனி ஃபாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர்களான கீழை முஜிபுர் ரஹ்மான் மற்றும் கவுன்சிலர் கீழை பாதுஷா ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய மாவட்ட நிர்வாகிகளாக தமுமுக/மமக மாவட்ட தலைவராக பிரீமியர் இபுராஹிம், தமுமுக மாவட்ட செயலாளராக பனைக்குளம் பரக்கத்துல்லா, மமக மாவட்ட செயலாளராக பிஸ்மி ஷேக், தமுமுக/மமக மாவட்ட பொருளாளராக முகவை அப்துல் ரஹீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கீழக்கரையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ச. முஹம்மது நஃபீலுக்கு மாவட்ட அளவில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





You must be logged in to post a comment.