21 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டாடி’ வெற்றிக்கு ஆதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி சொன்ன நடிகர் சூரி!

மண்டாடி’ வெற்றிக்கு ஆதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி சொன்ன நடிகர் சூரி!

எழுதியவர்: Baker BAker September 21, 2026, 7:36 pm

தொண்டி கடலோர மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்க வந்த சூரியை – ஊர்வலமாக அழைத்து வந்த பொதுமக்கள்

தொண்டி: திரையில் வெற்றி பெற்ற ‘மண்டாடி’… அதன் வெற்றிக்குப் பின்னால் துணை நின்ற மக்களை நேரில் சந்தித்து நடிகர் சூரி நன்றி தெரிவித்த சம்பவம் தொண்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கடலோரப் பகுதிகளான புதுக்குடி, கோட்டைப்பட்டினம், பாசிபட்டினம், நம்புதாலை உள்ளிட்ட பகுதிகளில் ‘மண்டாடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

கடலோரப் பகுதிகளின் இயற்கைச் சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, அப்பகுதி பொதுமக்கள் திரைப்படக் குழுவினருக்கு தேவையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கினர்.

திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், படப்பிடிப்பின்போது உறுதுணையாக இருந்த பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் திரைப்படக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி எம்.ஆர். பட்டினத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த நடிகர் சூரியை அப்பகுதி பொதுமக்கள் உற்சாகமாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, ‘மண்டாடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற காலத்தில் கடலோரப் பகுதி மக்கள் அளித்த அன்பு, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், திரைப்படத்திற்கு தற்போது கிடைத்து வரும் வரவேற்புக்கும் மக்களுக்கு நன்றி கூறிய அவர், படப்பிடிப்பு நாட்களில் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார்.

நடிகர் சூரியுடன் திரைப்படத்தின் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திரைப்படம் திரையில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடுவதுடன், அந்த வெற்றிப் பயணத்தில் துணை நின்ற மக்களை நேரில் சந்தித்து சூரி நன்றி தெரிவித்தது, தொண்டி பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!