ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோயில்களில் பணியாற்றிய பூசாரிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என பூசாரிகள் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக ஓய்வூதியம் கிடைக்காமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பூசாரிகள் சங்க நிர்வாகிகள், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றிணைந்து மனு அளித்துள்ளனர்.
மேலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி களிடமும், அறநிலையத்துறை அமைச்சரிடமும் ஏற்கனவே மனுக்கள் அளித்ததாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் மனு அளித்தும், தங்களது கோரிக்கைக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என பூசாரிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கோயில் பணியில் பல ஆண்டுகள் சேவையாற்றிய பூசாரிகளின் ஓய்வுக்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 2021 முதல் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, தகுதியானவர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூசாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பூசாரிகளின் ஓய்வூதிய கோரிக்கையில் அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்




You must be logged in to post a comment.