இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாக்கு உட்பட்ட அழகன்குளத்தில் 1987 முதல் 2016 வரை நடைபெற்ற அகழாய்வுகளில் பாண்டியர் கால நாணயங்கள், ரோமானிய பானை ஓடுகள், சுடுமண் உறைகிணறு உள்ளிட்ட சுமார் 13,000 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதி சுமார் 2,360 ஆண்டுகள் பழமையானது என அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அழகன்குளத்தில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தும், இதுவரை பணிகள் தொடங்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அழகன்குளத்தில் கிடைத்த தொல்பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“அழகன்குளத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழகன் குளத்திலேயே பாதுகாக்கப்பட வேண்டும். அரசு அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருங்காட்சி யகத்துடன் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பூங்காவும் அமைக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்




You must be logged in to post a comment.