21 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சின்ன கீரமங்கலத்தில் சுகாதார சீர்கேடு!

சின்ன கீரமங்கலத்தில் சுகாதார சீர்கேடு!

எழுதியவர்: Baker BAker September 21, 2026, 7:19 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சின்ன கீரமங்கலம் பகுதியில் ராமேஸ்வரம் செல்லும் சாலையோரங்களில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி கிடப்பதாகவும், இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் மற்றும் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

“மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் கழிவுநீர் தேங்கி கிடப்பது தெரிந்தும் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பல நாட்கள் மட்டுமின்றி மாதக்கணக்கில் பிரச்சினை நீடித்தும், கழிவுநீரை அகற்றவும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உடனடியாக தலையிட்டு, சின்ன கீரமங்கலம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பிரச்சினை மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!