இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாக்கு உட்பட்ட எஸ்.அண்டக்குடி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலமான புல எண் 38-ல், 2022–23-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரசு நிதியில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டது இதன் மூலம் அருகில் உருவாக்கப்பட்ட குறுங்காடு திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் ஆதாரமாக அமைக்கப்பட்டது ஆனால் அதனை
கடந்த 23.06.2025 அன்று ஜேசிபி இயந்திரம் மூலம் தனிநபர் ஒருவர் பண்ணைக்குட்டை மூடப்பட்டதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் ஜமாபந்தி கூட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர் இதன் தொடர்பாக
மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் 01.07.2026 அன்று புல எண் 38 அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கல் நடப்பட்டதாகவும், அந்தக் கல்லை 03.08.2026 அன்று சம்பந்தப்பட்ட நபர் பிடுங்கி அப்புறப்படுத்தியதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடமும், எமனேஸ்வரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறும் பொதுமக்கள், அரசு நிலத்தை மீட்டு, பண்ணைக்குட்டையை மீண்டும் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதுடன், சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பதாகைகள் ஏந்தி கோசமிட்டு மனு அளித்தனர்.




You must be logged in to post a comment.