கொடைரோடு அருகே, மாவுத்தம்பட்டியில் ரூபாய் 13 இலட்சத்தில் கட்டப்பட்ட, புதிய ரேசன் கடையை மக்களவை உறுப்பினர் திறந்து வைத்தார்.
கொடைரோடு அருகே, மாவுத்தம்பட்டியில் ரூபாய் 13 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அய்யனார் கலந்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட மாவுத்தம்பட்டியில் திண்டுக்கல் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 13 இலட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
அதனை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டபேரவை உறுப்பினர் ஆர்.அய்யனார் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.எஸ்.செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) இளவரசி, பேரூராட்சி எழுத்தர் செல்வம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் அசோக், விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் மாவட்ட நிர்வாகி செம்பட்டி மு.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.