23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பிரபல நகைக்கடையில் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் மூறைகேடு; பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்.!

பிரபல நகைக்கடையில் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் மூறைகேடு; பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்.!

எழுதியவர்: Askar May 23, 2026, 12:40 pm

பிரபல நகைக்கடையில் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் மூறைகேடு; பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்.!

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே உள்ள மூன்றாம் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வினி என்பவர் கட்ந்த 22.12. 2025 அன்று மார்த்தாண்டாம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் . அந்த மணுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 2018 -ம் வருடம் திருமணம் நடைபெற்றது. எனது திருமணத்தின் போது திருமணத்திற்குரிய நகைகளை பீமா ஜூவல்லர்ஸ் & டைமண்ட் கடையிலிருந்து விலைக்கு வாங்கியதால் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். என்னுடைய திருமணத்திற்கு பின்பு இரண்டுமுறை நகைகடையிலிருந்து சீட்டு மூலம் பணம் கட்டி நகை பெறும் திட்டத்தில் என்னை சேரவைத்து பணம் கட்டி முடித்த பின்னர் அசல் மற்றும் வட்டிக்கான நகைகளை பெற்றேன்.

இவர்கள் நடத்தும் நகைச்சீட்டு முறையானது 11 மாதங்கள் மாதம் மாதம் தவணை தொகையை நான் செலுத்தும்போது 12-வது மாதத்திற்குள்ள தவணை தொகையை கடையை நடத்துபவர்களே தொகையை செலுத்தி மொத்த தொகைக்குள்ள தங்க நகையை எனக்கு தருவது வழக்கம். நான் நகைகள் வாங்கும்போது கிரைசன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார் தற்போது அவர் அங்கு வேலை பார்ப்பதாக தெரியவில்லை. ஆனால் அவர் தற்போது அந்த கடைக்கு வாடிக்கையாளர்களை அழைத்து சென்று நகைகளை வாங்கி வருகிறார்.

நான் மூன்றாவது எடை சீட்டு முறை திட்டத்தில் 2024 அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் 40000 வீதம் செலுத்திவருகிறேன். தொடர்ச்சியாக 9 மாதங்கள் நான் இந்த சீட்டு புத்தகம் மூலம் பணம் செலுத்தி வந்தேன். 10 மற்றும் 11 மாதங்களுக்கு கிரைசன் என்பவர் கைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு கடைசி 2 மாதங்களும் Phone Pe மூலம் பணம் கெட்ட சொல்லியதால் Phone Pe மூலம் பணத்தை செலுத்தினேன். இறுதி மாதத்திற்கு கடை உரிமையாளர் பணம் போடுவதால் அக்டோபர் மாதம் 2025 தேதியில் பீமா நகை கடைக்கு சென்று எனக்கு வரவேண்டிய தங்க நகையை கேட்டேன் அப்போது கடை மேலாளர் என்னிடம் உங்கள் கணக்கில் உள்ள தங்க நகையை உங்களை போல கையொப்பம் இட்டு வாங்கி சென்றுவிட்டார்கள் என்று கூறினார். நான் அந்த கையொப்பங்களை பார்த்த போது அது என்னுடைய கையொப்பம் இல்லை என்னை நன்கு அறிமுகமானவர்கள் என்னை போல ஒருவருக்கு நான் என நினைத்து எவ்வாறு தங்க நகையை கொடுக்க முடியும் எதிரிகளே நான் செலுத்திய 480000/- ரூபாயை அபகரித்து கொண்டு போலியான கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து உள்ளனர். எனவே மோசடி செய்து போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய். 480000/- இழப்பு ஏற்படுத்திய எதிரிகள் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு சேரவேண்டிய பணமும் அதற்குள்ள வட்டியான 125000/-ம் சேர்த்து பணமாகவோ அல்லது அந்த தொகைக்குரிய நகையாகவோ சேர்த்து எனக்கு ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மேலும் நான் இரண்டாவது எதிர்மனுதாரரோடு மேற்படி நகைக்கடைக்கு சென்று ஒரு பவுன் கைச்செயின் உடைந்துபோனதால் அதை சரிசெய்து தரும்படி கொடுத்தேன். அந்த கைச்செயினும் சரிசெய்து தரவில்லை. இது சம்மந்தமாக தாங்களிடம் புகார் மனு அளிக்க வந்தபோது ADSP அவர்களிடம் 12.12.2025 -ல் முதல் புகார் மனுவை கொடுத்தேன். அவர் என்னிடம் விசாரித்துவிட்டு மார்த்தாண்டம் காவல் நிலையை ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்புகிறேன் என்று சொன்னார். ஆனால் இதுவரை மார்த்தாண்டம் காவல் நிலையத்த்திலிருந்து என்னை அழைத்து விசாரிக்கவில்லை. ஆனால் என கைப்பேசிக்கு முதல் எதிரி கடை உரிமையாளர் எனக்கூறி சமரசமாக பேசுவோம் என்று சொன்னார். யார் என்று எனக்கு தெரியவில்லை. முதல் எதிர் மனுதாரர் மிகப்பெரிய செல்வாக்குமிக்க வர்த்தகராக உள்ளார். அதன் பின்பு அவர் என்னோடு எதையும் பேசவில்லை. பின்பு மீண்டும் நான் 22.12.2025 -ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களிடம் நேரடியாக புகார் கொடுத்தேன். அந்த புகாரின் பேரில் தாங்கள் மார்த்தாண்டம் துணை கவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு கைபேசி மூலம் தொடர்புகொண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுத்து நகையை வாங்கி கொடுக்கும்படி கூறினர்கள். ஆனால் இதுவரையிலும் அந்த புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பார்என்னை விசாரித்து ஒரு மாதத்தில் வாங்கி தருகிறேன் என்று சொன்னார்கள். அதை நம்பி நான் 27.12.2025 மற்றும் 31.12.2025, 01.02.2026 ஆகிய தேதிகளில் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி கிரைசனும் நகையை தருவதாக எழுதி கையொப்பமிட்டு கொடுத்தார். ஆனால் இதுநாள் வரை நகையோ, பணமோ தரவில்லை.

மீண்டும் நான் 03.02.2026 அன்று மார்த்தாண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று என்னுடைய நகை குறித்து கேட்டேன். அதற்கு எந்த சரியான பதிலும் சொல்லவில்லை. நான் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்னால் அலைய முடியவில்லை. ஆகவே தாங்கள் மேற்படி எதிரிகளான பீமா ஜூவல்லரி உரிமையாளர், மேலாளர் மற்றும் விற்பனையாளர் கிரைசன் மற்றும் மோசடியில் சம்மந்தப்பட்ட அனைவர் மேலும் நடவடிக்கை எடுக்கும் படி அவர் அளித்த புகார் மீது மார்த்தாண்டாம் காவல்நிலைய போலீசார் மேற்ப்படி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது கடந்த 04.03.2026 அன்று குற்ற எண் 118/2026, பிரிவின் படி 318 BNS வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!