23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கை சிறையில் 88 நாட்களாகஉள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் சாலை மறியல்.!

இலங்கை சிறையில் 88 நாட்களாகஉள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் சாலை மறியல்.!

எழுதியவர்: Baker BAker May 23, 2026, 7:19 am

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 88 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் 88 நாட்கள் கடந்தும் விடுதலை செய்யப்படாமல் இலங்கை சிறையில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அந்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!