23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

எழுதியவர்: Baker BAker May 23, 2026, 6:54 am

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணிகள் நடைபெற்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வழிகள், தீ அணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, வாகன ஆவணங்கள் உள்ளிட்டவை முறையாக உள்ளனவா என அதிகாரிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து விதிமுறைகளையும் பள்ளி வாகன உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கருப்பண்ணன், முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி மற்றும் ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!