நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்திற்கு தவெக எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் வருகை. பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகம் எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் வருகை புரிந்தார். அவர், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நடைபெற்று முடிந்த, 2026 சட்டப் பேரவை தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் ஆர்.அய்யனார் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பிறகு, சென்னையில் இருந்து வருகை புரிந்த ஆர்.அய்யனார் எம்.எல்.ஏ., வெள்ளிக்கிழமை, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
அவரை தவெக நிர்வாகிகள் ஆராத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அலுவலகத்திற்குள் சென்ற அவர், தமிழக வெற்றி கழகம் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிர்வாகிகளை சந்தித்த அவர், தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என, பொதுமக்களிடம் தெரிவித்தார்.
நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் திறப்பு விழாவில், தமிழக வெற்றி கழக மாவட்ட பொருளாளர் விக்கி என்ற மகாராஜன், மாவட்ட பொறுப்பாளர், தவ்பீக் ராஜா, விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் நிர்வாகி செம்பட்டி எம்.ராஜா, தவெக கலை இலக்கிய அணி மாவட்ட நிர்வாகி சீனிவாசன் மற்றும் நிலக்கோட்டை ஒன்றிய தவெக செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், தவெக இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவரணி சார்பு அணி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.