23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருச்செந்தூர் அருகே கார் வாங்கித் தர தந்தை மறுப்பு: வாலிபர் தற்கொலை!

திருச்செந்தூர் அருகே கார் வாங்கித் தர தந்தை மறுப்பு: வாலிபர் தற்கொலை!

எழுதியவர்: Askar May 8, 2026, 11:45 am

திருச்செந்தூர் அருகே கார் வாங்கித் தர தந்தை மறுப்பு: வாலிபர் தற்கொலை!

திருச்செந்தூர் அருகே தந்தை கார் வாங்கித் தர மறுத்துத் திட்டியதால், மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி, கஸ்பா புதுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பவித் குமார் (28). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பரமன்குறிச்சிக்கு வந்துள்ளார்.

ஊருக்கு வந்த பவித்குமார், தனக்குச் சொந்தமாக ஒரு கார் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவரது தந்தை மறுப்புத் தெரிவித்ததுடன், அவரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பவித் குமார், தனது வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகத் திருச்செந்தூர் உதவி ஆய்வாளர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!