23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » AI-generated போட்டோவை உண்மை என நம்பி பரப்பும் பொறுப்பற்ற ஊடகங்கள்..

AI-generated போட்டோவை உண்மை என நம்பி பரப்பும் பொறுப்பற்ற ஊடகங்கள்..

எழுதியவர்: Askar May 3, 2026, 7:30 am

AI-generated போட்டோவை உண்மை என நம்பி பரப்பும் பொறுப்பற்ற ஊடகங்கள்..

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் – பார்கி அணையில் நடந்த படகு விபத்தில் 9 பேர் பலியானார்கள்.

இதில் ஒரே லைப் ஜாக்கெட்டில் தாய் தனது மகனை அணைத்தப்படி உயிரிழந்த போட்டோ வைரலாகி நாட்டையே உலுக்கியது- காண்போரின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

இந்த போட்டோ உண்மை தானா.? என தேடினால் அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ( AI-generated) போலியான போட்டோ என தெரியவருகிறது

ஜபல்பூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், அந்தப் படத்திற்கும் “பர்கி படகு விபத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

ஜபல்பூர் காவல்துறை அதிகாரிகளும் வைரலான அந்தப் படத்திற்கும் விபத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதியாக மறுத்துள்ளனர்.

பொதுமக்கள் சமூக வலைதளத்தில் உண்மை அறியாமல் உண்மை என நம்பி ஏதோ பரப்பிவிட்டாலும்,

உணமையை உலகுக்கு எடுத்துரைக்கும் பத்திரிக்கைத்துறை பொறுப்புணர்வோடு செய்திகளை வெளியிட வேண்டும்.

நிகழ்விடத்தின் உணர்ச்சிப்பூர்வமான படம் கிடைத்தால், குறைந்தப்பட்ச இணைய ஆய்வு செய்து உண்மை தண்மை அறிந்து பொறுப்போடு பதிவிட வேண்டும்.

மற்றவர்கள் பதிவிடும் முன் நாம் பதிவிட வேண்டும் என முந்தியடித்து பொறுப்பற்ற முறையில் பதிவிடுவது ஊடக தர்மம் இல்லை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!