234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 85.1% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தி.மு.க கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகளும் அதையே வழிமொழிந்துள்ளன. AGNI NEWS வெளியுட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 169 இடங்களில் வெற்றிவெறும் என கணித்துள்ளது. அதேபோல் PEOPLES PULSE வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 125 -145 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. Chanakya Strategies கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 145 -160 தொகுதிகளில் வெல்லும் என்று கணித்துள்ளது. ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் 145 இடங்களை கைப்பற்றி தி.மு.க ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது. மின்னம்பலம் தி.மு.க கூட்டணி 155 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என அறிவித்துள்ளது.Desh Ka Vardict கருத்துக்கணிப்பில் 125-140 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெல்லும் என்று கணித்துள்ளது.TIMES NOW கருத்து கணிப்பில் தி.மு.க கூட்டணி 145-155 இடங்களில் வெற்றி பெறும் என கணித்துள்ளது.POLITICAL LABORATORY வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தி.மு.க கூட்டணி 135 – 140 தொகுதிகளில் வெல்லும் என அறிவித்துள்ளது.APP நாடு கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 148 – 168 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது. Matrize வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவில் 122 -132 தொகுதிகளில் இடம் பிடித்து தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.P-Marq கணிப்பில் 125-145 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெல்லும் என்று கணித்துள்ளது. பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தி.மு.க கூட்டணி 120 – 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
எழுதியவர்: Askar April 30, 2026, 8:56 am




You must be logged in to post a comment.