சின்னாளபட்டியில்,145 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட, இடைவிடாது 4 மணி நேரம் உலக சாதனை ஸ்கேட்டிங் போட்டி.
சின்னாளபட்டியில், ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது 4 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை ஸ்கேட்டிங் போட்டியில் 145 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சாதனைபடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் ராஜன் உள் விளையாட்டரங்கில், 145 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இடைவிடாது 4 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை ஸ்கேட்டிங் போட்டிக்கு சர்வதேச நடுவர் பிரேம்நாத் தலைமை வகித்தார்.
போட்டியை தென்னிந்திய ரோல்பால் ஸ்கேட்டிங் செயலர் எம்.பி.சுப்பிரமணியம் தேசிய கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒலி பெருக்கி மூலம் இசை முழங்க, வீரர் வீராங்கனைகள் மைதானத்தில் இடைவிடாது, 4 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்தனர். போட்டியில் 3 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு 4 மணி நேரம் இடைவிடாது உலக சாதனை ஸ்கேட்டிங் போட்டியில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்காக குடிதண்ணீர், சிற்றுண்டிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் மாணவர்களுக்கு அவசர மருத்துவ உதவி மேற்கொள்ள மருத்துவ குழு ஏர்பாடுகளும் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியல் பங்கேற்று, 4 மணி நேரம் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர், நிகழ்ச்சியில் பயிற்சியாளர் தங்கலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.