23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நாகர்கோவிலிலில் ரயிலை சிறைப்பிடித்த பயணிகள்! பரபரப்பு..

நாகர்கோவிலிலில் ரயிலை சிறைப்பிடித்த பயணிகள்! பரபரப்பு..

எழுதியவர்: Askar April 27, 2026, 9:31 am

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்த சென்னை சென்ட்ரல்- சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணிகள்.

நேற்று தொடர் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியிருந்தனர்-

அந்த நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லக்கூடிய, சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்,

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிற்காமல் மெதுவாக சென்றுள்ளது இதில் அங்கு கூடி இருந்த பயணிகள் முன்டியடித்து ரயில் ஏற முற்பட்டனர்,

அப்போது விபரிதத்தை உணர்ந்த, ரயிலில் இருந்தவர்கள் அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தி உள்ளனர், இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது,

உடனே ரயில்வே பைலட் மேல் ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் சிறைபிடித்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!