23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜோதி நகர் பகுதியில் ராட்சத ஆப்பிள் மாலை அணிவித்து வேட்பாளரை வரவேற்ற பொதுமக்கள் .!

ஜோதி நகர் பகுதியில் ராட்சத ஆப்பிள் மாலை அணிவித்து வேட்பாளரை வரவேற்ற பொதுமக்கள் .!

எழுதியவர்: Baker BAker April 20, 2026, 10:37 am

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி மேற்கொண்டு வரும் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது.

தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி வரும் வேட்பாளருக்கு, 

மகா சக்தி நகர் , ஜோதி நகர் பகுதியில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.சைனா பாஸ்கரன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சி ஆர் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் ராட்சத ஆப்பிள் மாலை அணிவித்து தாரை தப்பட்டை ஒலி பொங்க பூக்களை தூவி அமோக வரவேற்பை வழங்கினர் . மேலும் வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பகுதி மக்களுக்கு வெற்றி பெற்றவுடன் சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து தருவேன் என்று உறுதி அளித்தார். தொடர்ச்சியாக பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மலர் மாலைகள் அணிவித்து, பூமாலை தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மேலும், “இரட்டை இலை” சின்னத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் அளித்து, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்” என்று பொதுமக்கள் உறுதிமொழி அளித்தது நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியது.

இந்த உற்சாகமான வரவேற்பு, தொகுதியில் வேட்பாளருக்கு பெரும் ஆதரவு இருப்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!