23 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இந்த தேர்தலில் அடிமைகளுக்கும், சங்கிகளுக்கும் பூட்டுபோட வேண்டும்: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேச்சு.. 

இந்த தேர்தலில் அடிமைகளுக்கும், சங்கிகளுக்கும் பூட்டுபோட வேண்டும்: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேச்சு.. 

எழுதியவர்: Askar April 17, 2026, 12:19 pm
இந்த தேர்தலில் அடிமைகளுக்கும், சங்கிகளுக்கும் பூட்டுபோட வேண்டும். துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேச்சு.
நிலக்கோட்டை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ச.நாகஜோதியை ஆதரித்து, அம்மையநாயக்கனூரில், வியாழக்கிழமை   பிரச்சாரத்தில் ஈடுபட்ட, துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்,
இந்த தேர்தலில் அடிமைகளுக்கும், சங்கிகளுக்கும் பூட்டுபோட வேண்டும் என,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதி  திமுக வேட்பாளர் ச.நாகஜோதியை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு  வாக்கு கேட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேசியதாவது, திண்டுக்கல் மாவட்டம்,  என்றும் திமுக கோட்டை என்பதை நிரூபித்து காட்டவேண்டும். திமுகவை  எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் வாங்க கூடாது. அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் நாகஜோதியை  வெற்றி பெறச்செய்ய வேண்டும். வருகின்றன தேர்தலில் அடிமைகளுக்கும், சங்கிகளுக்கும் பூட்டுபோட வேண்டும். அதிமுகவிற்கும், பாஜகவும் வரவிடாமல் பூட்டு போடவேண்டும். நிலக்கோட்டை தொகுதியில் 50 ஆண்டுகளாக திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லை. இந்த வரலாற்றை இந்தமுறை  நீங்கள் மாற்றிக்காட்டவேண்டும். நாகஜோதியை வெற்றி பெறச்செய்தால்,
பெண்களுக்கான திட்டங்கள்  உங்களை தேடிவந்து செய்து கொடுப்பார்.  நிலக்கோட்டை திமுகவின் கோட்டை என்பதை நீங்கள் செய்து காட்டவேண்டும். நிலக்கோட்டை தொகுதியில் நமது சட்டபேரவை  உறுப்பினர் இல்லை என்றாலும் திமுக ஆட்சியல் நிறைய திட்டங்கள் செய்துள்ளோம்.ஒவ்வொரு மகளிரும் கட்டணமில்லா பேருந்து, கல்வி ஊக்கத்தொகை, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம்.
மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு  வழங்கப்பட்டு வருகிறது. இதை நிப்பாட்ட அதிமுகவும், பாஜகவும் முயற்சித்தனர். ஆனால், இதை முறியடித்து மூன்று மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம்  நமது முதலமைச்சர் வழங்கினார்.
மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், எட்டாம் வகுப்புவரை காலை உணவுத்திட்டம், கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும். இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த, 5 ஆண்டுகளில் 10 இலட்சம் கனவு இல்லம் கட்டித்தரப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக வேட்பாளரை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு எந்த திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு  கொடுப்பதில்லை, நிதியையும் கொடுப்பதில்லை. தமிழகத்தை பலி வாங்குகிறார்கள். நாம் அவர்களை தேர்தலில் பலி வாங்குவோம்.அரசியலில் முரட்டு பக்தர்கள் பார்த்திருப்பீர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்பீர்கள். முரட்டு அடிமை பார்த்திருக்கிறீர்களா. அவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.
பாராளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு 12 எம்பி.,க்களை குறைக்கப் பார்க்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராது என்கிறார். அவர் பாதிப்பு என்றால் அவருக்கு மத்திய அரசு மூலம் பாதிப்பு வந்து விடும். இதனால் தான் முரட்டு அடிமை என்கிறேன்.
பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்கு கிடையாது. சங்கி கூட்டத்திற்கு அடிமையாக இருக்கும் அனுபவம் எனக்கு கிடையாது. நிச்சயம் மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. எனது தொகுதி வெற்றியை விட நிலக்கோட்டை தொகுதி வேட்பாளரை வெற்றி முக்கியம் இவ்வாறு,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு  திமுக நிர்வாகிகள் வீரவாள் வழங்கினர். பரப்புரையின் போது, திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!