21 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..

எழுதியவர்: Abubakker Sithik April 16, 2026, 3:18 pm

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் அலுவலக வளாகத்தில் இன்று (16.04.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமர்சேவா சங்கம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமர்சேவா சங்கம் சார்பில் இரண்டு சக்கர வாகனத்தின் மூலமும், “நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்”, “உங்கள் வாக்கு உங்கள் உரிமை”, “வாக்குரிமை உங்கள் சக்தி” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய ரங்கோலியின் மூலமும், 100% வாக்குப் பதிவினை வலியுறுத்தி டிரோன் மூலம் 100% VOTERS தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் எ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அலெக்ஸ், அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், இளம் வல்லுநர் அகத்தியர், காவல் ஆய்வாளர் ஆடிவேல், உதவி காவல் ஆய்வாளர் ரத்தினபால் சாந்தி, குழந்தை நல குழுமம் தலைவர் விஜயராணி மற்றும் மாற்றுத் திறனாளிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!