23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொடைரோடு  அருகே, குடிதண்ணீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு.

கொடைரோடு  அருகே, குடிதண்ணீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு.

எழுதியவர்: Askar April 15, 2026, 9:36 am
கொடைரோடு  அருகே, குடிதண்ணீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு.
கொடைரோடு  அருகே, அழகம்பட்டியில்  குடிதண்ணீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,  கொடைரோடு அருகே, ஜம்புதுரைக்கோட்டை  ஊராட்சிக்கு உட்பட்ட, அழகம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால், இக்கிராம பொதுமக்கள் தினமும் ஒரு குடம் தண்ணீர்  15 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இக்கிராமத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, முறையான பேருந்து வசதி, பொது கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, இக்கிராம மக்கள் பலமுறை நிலக்கோட்டை யூனியன் அலுவலகம்,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டு அலுவலகங்களில் அதிகாரிடம் பலமுறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள்  குடிதண்ணீர்,  தெருவிளக்கு சாலை வசதி பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு அழகம்பட்டியில், நிலக்கோட்டை –  சின்னாளபட்டி சாலையில்  சுமார் 100-க்கும் மேற்பட்டோர்  காலி குடங்களை சாலையில்  வைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காலை 6  மணிக்கு தொடங்கி சாலை மறியல் போராட்டம்  சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அம்மையநாயக்கனூர் காவல் சார்பு ஆய்வாளர்  சௌடமுத்து,  நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)  குமரவேலு, ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்ற செயலர் சிவராமன், பச்சமலையான்கோட்டை ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல்  போராட்டத்தால் அனைத்து வாகனங்களும் மாற்று சாலையில்  சென்றது. இந்த சம்பவத்தால் இப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், துரித நடவடிக்கை எடுத்த நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) குமரவேலு தற்காலியமாக குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார். குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்காண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!