தென்காசி மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில் சமரச தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமையில், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மனோஜ்குமார், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா, முதன்மை சார்பு நீதிபதி.ஏ.பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி எஸ். முருகவேல், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெ.ராஜேஸ்குமார், நீதித்துறை நடுவர் நீதிபதி எஸ்.முத்துலெட்சுமி ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த சமரச விழிப்புணர்வு பேரணியை தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி தென்காசி திருநெல்வேலி சாலையில் சென்று அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்று திரும்பி நீதிமன்றத்திற்கு வந்து நிறைவு பெற்றது. இந்த பேரணியில் பொது மக்களுக்கு சமரசத் தீர்வு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
அதன் பின்னர், சமரச விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சமரச விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியில், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி..ராஜவேல் தலைமையுரையாற்றினார். தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர். மாடக்கண் மற்றும் வழக்கறிஞர் எம். தாஹிராபேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சமரசத் தீர்வு குறித்து உரையாற்றினார்கள். நிகழ்ச்சியினை வழக்கறிஞர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்க நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் எம்.மாரியப்பன், மாடசாமி பாண்டியன், ஏ.ராஜா, வேல்பாண்டி, பன்னீர் செல்வம், சொக்கலிங்கம், முகம்மது சலீம், மஞ்சு கிருஷ்ணா, முத்துலெட்சுமி, மரகதம், மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் அனைவருக்கும் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதியும், இலவச சட்ட உதவி செயலாளருமான எஸ்..முருகவேல் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.