23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சற்றே ஆறுதல் அளித்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன…

சற்றே ஆறுதல் அளித்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன…

எழுதியவர்: Askar April 9, 2026, 1:15 pm

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, சேமிப்பின் அடையாளமாகத் திகழும் தங்கம் விலை அண்மையில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்றைய தினம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9) தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து மக்களுக்குச் சிறிய ஆறுதலை அளித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 9) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி:

22 காரட் தங்கம்: சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலையில் ரூ.200 குறைந்து, ரூ.14,000-க்கு விற்பனையாகிறது.

18 காரட் தங்கம்: இதன் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.210 குறைந்து ரூ.11,650-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 குறைந்து ரூ.93,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி விலையில் 5,000 ரூபாய் சரிந்து, தற்போது ஒரு கிலோ ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஊசலாட்டத்தில் இருப்பதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த விலை மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நேற்று விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு இல்லத்தரசிகளுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!