போலி சான்றிதழ் வழக்கு: ஓய்வுக்கு முன் நகராட்சி ஊழியர் டிஸ்மிஸ்
ராமநாதபுரம், மார்ச் 29:
போலி கல்வி சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த என். ஐயப்பன், சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார். இவர் வரும் மார்ச் 31, 2026 அன்று பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இருந்தார்.
இந்நிலையில், இவர் போலி கல்வி சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் இன்று (மார்ச் 29) என். ஐயப்பன் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.