23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை. 

கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை. 

எழுதியவர்: Askar March 26, 2026, 9:23 am
கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை. 
 
அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி காரணமாக, கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில், புதன்கிழமை  ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மதுரை தலைமை தபால் அலுவலகத்திற்கு புதன்கிழமை காலை  இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  அதில், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 தபால் அலுவலகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  
 
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம்,  கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு, சார்பு ஆய்வாளர் தர்மராஜ்  தலைமையில் 4  வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
 
இதில், கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் கணினி அறை,  ஜெனரேட்டர் அறை, கழிப்பறை, கோப்புகள் வைத்துள்ள அறைகள் மற்றும் அலுவலகங்களை சுற்றி உள்ள தடுப்புச்சுவர் பகுதிகளில் மெட்டல் ட்ரேடு எந்திரம் மூலம் தீவிர சோதனை நடத்தினர். மேலும், இந்த அலுவலகங்களில் மோப்பநாய் ராக்கி அழைத்து வரப்பட்டு தீவிர சோதனை நடத்தினர்.
 
கொடைரோடு தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை நடத்தினர். இச்சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.  
 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!