17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதிகளில் டாஸ்மாக் கடை வெறிச்சோடி இருந்தன

செங்கம் பகுதிகளில் டாஸ்மாக் கடை வெறிச்சோடி இருந்தன

எழுதியவர்: mohan June 14, 2021, 4:13 pm

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், கூடுதல் தளர்வுகளாக தமிழக அர டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில்அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மது வாங்க வரும் மது பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்பு கட்டைகளை அமைத்தல், மது பிரியர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க கடைக்கு முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன எனினும் செங்கம் பகுதிகளில் மது பிரியர்கள் குறைந்த அளவு மது வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடை வெறிச்சோடி காணப்பட்டதுகாலை 10 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, முக கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் நிபந்தனைகளுடன் செங்கம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர் . கரோனா நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக செங்கம் சுற்றுப்புற வட்டார பகுதிகளில் குறைந்த அளவு மது விற்பனை செய்யப்பட்டன குறிப்பிடத்தக்கது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!