திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பாரத சாரணர் சாரணிய இயக்கத்தின் சார்பில் இராஜபுரஸ்கார் தேர்வுக்கான (ஜூம் செயலி) ஆன்லைன் கூட்டம்
நடைபெற்றது.செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் ஆலோசனையின்படி பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அமைப்பு ஆணையர் செந்தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். சாரணிய இயக்க மாவட்ட பயிற்சி ஆணையர் கோமதி ராஜபுரஸ்கார் தேர்வுக்கான பயிற்சி மற்றும் படை பதிவு அவசியம் பற்றியும் விளக்கமாக கூறினார். மாவட்ட அமைப்பு ஆணையர் அன்பழகன், எடக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், உதவி செயலர் ஸ்டெல்லா, நம்மியந்தல் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பாக நடைபெற்ற ராஜஸ்கார் தேர்வுக்கான ஆயத்த கூட்டத்தில் செங்கம் சார்ந்த 22 பள்ளி சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாவட்ட பயிற்சி ஆணையர் பாலகுமாரன் நன்றி கூறினார்
பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் ராஜ்யபுரஸ்கார் தேர்வுக்கான ஆயத்த கூட்டம்
எழுதியவர்: mohan March 19, 2021, 9:04 am



You must be logged in to post a comment.