18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் கல்லூரியில் கல்வி கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் கல்லூரி வாசல் முன் அமர்ந்து போராட்டம் .

தனியார் கல்லூரியில் கல்வி கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் கல்லூரி வாசல் முன் அமர்ந்து போராட்டம் .

எழுதியவர்: mohan March 5, 2021, 10:06 am

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மூடப்பட்டதுதற்போது கல்லுரி திறக்கப்பட்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் கல்வி கட்டணம் எந்த வித முன்னறிவிப்பின்றி பல மடங்கு உயர்த்தபட்டதால் மாணவ, மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.செமஸ்டர் தேர்வு கட்டணம், கல்லூரி பராமரிப்பு கட்டணம் என கூறி பல மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தியும், கட்டணத்திற்குரிய உரிய ரசீது தராமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசல் முன் அமர்ந்து திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்உடனடியாக கல்வி கட்டணத்தை குறைத்து அறிவிக்க கோரியும் செமஸ்டர் தேர்வை முறையாக எழுத அனுமதிக்க கோரியும் மாணவர்கள் தமிழக அரசுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!