கீழக்கரையில் ஜகாத் கமிட்டி  பொதுக்குழு கூட்டம் ! நிர்வாகிகள் தேர்வு!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டியின்) பொதுக்குழு கூட்டம் ஜகாத் கமிட்டியின் அலுவகத்தில் இன்று  நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு   மூத்த உறுப்பினரும் கௌரவ ஆலோசகருமான க.கு அப்துல் ஜப்பார் மற்றும் சிக்கந்தர்  பாட்சா ஆகியோர் தலைமை தாங்கினார்.  ஜகாத் கமிட்டி செயலாளர் ஷாஹுல் ஹமீது முன்னிலை வகித்தார்.  ஜகாத் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் வரவேற்புரை வழங்கினார்.பொருளாளர் சீனி முஹம்மது ஆண்டறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் நஜீம் மரிக்கா தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நாளும் ஒரு நபிமொழி புகழ் கீழக்கரை புதுப்பள்ளி கத்தீப் மன்சூர் நூரி ஆலிம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து  3850 முறை  நாளும் ஒரு நபிமொழி  பதிவு செய்த மௌலானா மன்சூர் நூரி ஆலிமின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் ஊடக துறையில் சிறப்பாக செல்பட்டு வரும்  சகோதரர் நிருபர் முஹம்மது பாக்கருக்கும்  பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் தற்போது இருக்கும் நிர்வாகிகளே 2026 வரை தொடர்ந்து செயல்படுவார்கள் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதியதாக செயற்குழு உறுப்பினர் சேர்க்கப்பட்டது.  நிறைவாக ஷுஹாதாகள் பள்ளியின் இமாம்  அப்துல் ரவூப் ஆலிம் இறைவசனம் ஓத கமிட்டியின் முதன்மை நிர்வாகி அஹமது குதுபுத்தீன் ராஜா நன்றியுரையாற்றினார் . கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!